விருப்பும் வெறுப்பும் அளவோடு

 விருப்பும் வெறுப்பும் அளவோடு


وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ (216)


 இஸ்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை நடைமுறையை கற்பிக்கிறது.


எதையும் அளவோடு நேசிக்கனும் அளவோடு வெறுக்கனும்.


ஒன்றை நேசித்தால் உளமாற நேசிக்கனும் வெறுத்தால் உளமாற வெறுக்கனும் என்பதற்கு இது எதிராணது அல்ல. விருப்பிலும் வெறுப்பிலும் எல்லை கடந்து சென்று விடக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.


சிலர் ஒன்றை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் எல்லை மீறிச் சென்றுவிடுவர், அதாவது உண்மைக்கு எதிராக சென்று விடுகிறார்கள்


கத்திரிக்காய் பிடிக்காது என்றால் அதை கண்ணால் பார்ப்பதை கூட விரும்பமாட்டார்கள். கதிரிக்காய் உங்களுக்கு பிடிக்காது என்றால் சரி. அதில் நன்மையே இல்லை என்பது போல் நடந்து கொண்டால் அது முறையில்லையே. அதுவே எல்லை மீறலாகும்



அசைவம் பிடிக்காத ஒரு ஆசிரியர் பள்ளிக்கூட்த்தில் மாணவர்களிடம் “இரத்தமும் சாணமும் கலந்து கிடக்கிற இறைச்சியை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்று முகத்தை எட்டு கோணலாக்கிக் கொண்டு சொன்னார்.


விவரமான ஒரு மாணவன் எழுந்து< ஐயா நாங்கள் சாணத்தை தனியே எடுத்து கீரைச் செடிக்கு போட்டு விடுவோம். இறைச்சியை சுத்தமாக்கிய பிறகு சாப்பிடுவோம். அந்த சாணத்தில் விளைந்த கீரையை தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றான்.


விருப்பும் வெறுப்பும் எல்லை மீறுகிற போது அமைதி கெடும்.


அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) யூதராக இருந்து இஸ்லாமை தழுவியவர், ஒரு விருந்தின் போது ஒட்டக கறி பரிமாரப்பட்ட்து. அப்போது அவரது முகம் வெறுப்பால் சுருங்கியது. அல்லாஹ் கூறினான்.


 يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة


இது ஒரு முக்கியமான தத்துவத்தை தருகிறது. 


ஒரு சமூக அமைப்பிற்குள் முழுமையாக இணைந்து விடும் போது நமது தனிப்பட்ட விருப்பு அல்லது வெறுப்பை பெரிதாக வெளிப்படுத்தக் கூடாது.  


சில்ம் என்ற வார்த்தை இஸ்லாம் என்ற பொருள்ள சுட்டி நிற்கிறது என்றாலும், அமைதி என்றும் அதற்கு ஒரு பொருள் உண்டும்.


அதன்படி பார்க்கிற போது விருப்பு வெறுப்பை பொது வெளியில் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் பொது சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை அது உணர்த்துகிறது.


ஒரு விருந்தில் கலந்து கொள்கிறீர்கள். அங்கே உங்களுக்கு பிடிக்காத ஒன்று பரிமாறப்படுகிற போது “இதை எல்லாம் மனுஷன் சாப்பிடுவானா” என்று நீங்கள் கோபமாக கேட்பீர்களானால் சண்டைக்கு சொல்லவும் வேண்டுமா ?


விருப்பு வெறுப்பின் போது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம்


இன்று நீங்கள் வெறுப்பது நாளை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது.


இந்தியாவின் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். ஏராளமான இந்துக் கோயில்களுக்கு தாரளமாக மானியங்களை வழங்கியவர்


 கோவையில் அவினாசி ரோட்டில் தண்டு மாரியம்மன் கோயில் என்ற பிரபலமான ஒரு கோயில் இருக்கிறது. தண்டு என்ற வார்த்தைக்கு படை தங்கியிருக்கிற இடம் என்று பொருள்.


அந்த இட்த்தில் திப்புவின் படை தங்கியிருந்த்து. அப்போது ஒரு வீரனுக்கு சாமி வந்த்து. நான் இங்கு குடியிருக்கும் அம்மன் என்று கூறியது. அந்த இட்த்திலிருந்து படைகளை வெளியேறுமாறு கூறிய திப்பு அங்கு கோயில் கட்டிக்கொள்ள நிலம் அளித்தார். இதற்கான பட்டம் இப்போதும் கோயிலுனுள் உள்ளது


 இது போல எண்ணற்ற செய்திகள் திப்புவின் சமய நல்லிணக்க உணர்விற்கு சான்றாக இருக்கும் போது பொய்யாக திப்பு இந்துக்களை கொன்றார் என்று கூறி அவர் மீது வெறுப்பை உண்டு பன்ன முயற்சிக்கிறார்கள். அதன் உச்சகட்டமாக அவரது பெயரை கூட பயன்படுத்த மறுக்கிறார்கள்/


 கர்நாடக மாநிலத்தின் சுற்றுலாத்தளங்களின் பட்டியலில் இப்போதெல்லாம் திப்புவின் நினைவிட்த்தையோ அவரது வாழ்விடங்களையோ குறிப்பிடக் கூட மறுக்கிறார்கள்/


 உண்மைக்கு எதிரான இத்தகை வெறுப்புணர்வு நிச்சயம் நல்லதல்ல. இத்தகையோர் கடைசியில் அறிவீனர்களாகவே வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்கு வீசப்படுவார்கள்/.


 

Comments

Popular posts from this blog